மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? |
தெலுங்கு திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து ஹிந்தியில் படங்களை இயக்கி பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக மாறியவர் ராம்கோபால் வர்மா. அவரது படங்கள் ரியலிஸ்டிக்காக இருக்கும் என்பதுடன் பல நேரங்களில் சர்ச்சைகளையும் கிளப்பும். இன்னொரு பக்கம் அவர் வெளியிடும் சோசியல் மீடியா பதிவுகளும் தங்களது பங்கிற்கு ஏதாவது சர்ச்சையை கிளப்புவதும் வழக்கம். இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தன்னுடைய பி டெக் டிகிரியை முடித்ததற்கான சான்றிதழை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து தற்போது தான் படித்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பெற்றுள்ளார்.
ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் 1985ல் சிவில் இன்ஜினியரிங்கில் பி டெக் படிப்பை முடித்தார் ராம்கோபால் வர்மா. ஆனால் தொடர்ந்து, படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்க விருப்பம் இல்லாமல் சினிமாவில் நுழையும் ஆர்வத்தில் இருந்ததால் தனது டிகிரி சான்றிதழை இதுவரை வாங்காமலேயே இருந்தார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தற்போது பல்கலைக்கழகத்திற்கு நேரிலேயே சென்று அந்த பட்டத்தை பெற்றுள்ளதுடன் அதுகுறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.